தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் இசையமைப்பாளராக சாதித்தது மட்டுமின்றி, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார். மேலும் தற்போது இவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானதே சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் முலம் தான். 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சசிக்குமார் இயக்கிய இப்படத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் தனது முதல் திரைப்படத்திலே ஜேம்ஸ் வசந்தன் பெரியளவில் பெயரை பெற்றார்.
மதுரையின் 80-களில் நடந்த திரைப்படமாக உருவாகிய இப்படத்தில் அவரின் இசை பக்கபலமாக அமைந்தது. இப்படத்தில் அமைந்த கண்கள் இரண்டால் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இப்பாடலுக்கு இன்றளவும் பெரிய ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.
தற்பொழுது சுப்ரமணியபுரம் பட ஹீரோவான நடிகர் சசிகுமாரும், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…