“EPS மறக்கமுடியாத அளவுக்கு செஞ்சி விட்ரனும்” பழைய பகையைத் தீர்க்கக் களம் இறங்கிய சசிகலா.. எடப்பாடிக்கு காத்திருக்கும் மரண அடி..!!

Spread the love

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்க முழுமுதற் காரணமாக இருந்தவர் சசிகலா. ஆனால், அதிகாரம் கைக்கு வந்தவுடன் சசிகலாவையே கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி நீக்கினார். தனது தலைமைக்கு சவால் விடுப்பார்கள் எனக் கருதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர் ஓரங்கட்டினார். ஒட்டுமொத்த அதிமுகவையும் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள எடப்பாடி, பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க முன்வராததால் சசிகலா தற்போது அரசியல் ரீதியாகத் தனித்து விடப்பட்டுள்ளார்.

தொடர் தேர்தல் தோல்விகளால் பலவீனமடைந்துள்ள அதிமுகவை மீண்டும் பலப்படுத்த, பிரிந்தவர்கள் இணைய வேண்டும் எனச் சசிகலா எடுத்த முயற்சிகள் எடப்பாடியின் பிடிவாதத்தால் தோல்வியடைந்தன. குறிப்பாக, டிடிவி தினகரன் எடப்பாடியைச் சந்தித்துப் பேசியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அதேசமயம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்ததையும் சசிகலா ரசிக்கவில்லை. இதனால் எடப்பாடியின் “துரோகத்திற்கு” முற்றுப்புள்ளி வைக்கவும், தனது பலத்தைக் காட்டவும் ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை அவர் தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலில் தென்மண்டலம், கொங்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலங்களில் சசிகலா தனது வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளார். குறிப்பாக, அதிமுகவில் சீட் கிடைக்காத முன்னாள் எம்.எல்.ஏ-க்களான உசிலம்பட்டி அய்யப்பன், திண்டுக்கல் ராமுத்தேவர் போன்ற முக்கியப் புள்ளிகளைத் தனது வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதால், முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. இது எடப்பாடி தலைமையிலான அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பெருமளவில் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Soundarya

Recent Posts

3 வருட காதலுக்கு ‘Breakup’ சொன்ன காதலி..! அலுவலகத்திற்குள் புகுந்து.. கத்தியால் குத்திக்கொன்ற கொடூர காதலன்… தானும் தற்கொலை முயற்சி…!!

மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது…

10 minutes ago

டெல்லியை உலுக்கிய ‘காக்கரோச் ஜனதா கட்சி’… ஜந்தர் மந்தரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.. ஒட்டுமொத்த நாடே அதிர்ச்சி…!

இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…

29 minutes ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

35 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

42 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

51 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

60 minutes ago