அதிமுகவின் 55-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, கட்சியை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா விடுத்திருக்கும் அழைப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் தோல்விகள் மற்றும் கட்சி தள்ளப்பட்டுள்ள மூன்றாவது இடத்தால் கவலையடைந்துள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள், சசிகலாவைத் தொடர்பு கொண்டு அவரிடம் பேசி வருத்தம் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் கட்சி அழிந்து வருவதாகக் கூறி, அதிமுகவை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் சசிகலாவிடம் முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குரியவரான கே.பி.முனுசாமியிடமும் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இரு தரப்பிலுமே ஈகோ தொடர்பான சிக்கல்களே பிரதான தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது; எடப்பாடி பழனிசாமியை சசிகலா நேரில் வந்து சந்திக்க வேண்டும் என ஒரு தரப்பும், தன்னை வந்து சந்தித்து கட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி சசிகலா கூற வேண்டும் என மறு தரப்பும் எதிர்பார்ப்பதால் பிணக்கு நீடிக்கிறது. குறிப்பாக, “அவரை ஆளாக்கி அதிகாரத்தில் உட்கார வைத்த நான், எப்படி போய் அவரைச் சந்தித்து கெஞ்ச முடியும்?” என்று சசிகலா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இக்கட்டான சூழலில், எடப்பாடி – சசிகலா சந்திப்பு நிகழாவிட்டால் நவம்பரில் எடப்பாடிக்கு எதிராக போட்டிப் பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்கும் ஆலோசனைகளிலும் எதிர்ப்பாளர்கள் இறங்கியுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று தொண்டர்களுக்கு நம்பிக்கையைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமானால், இந்தத் தலைமை மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே கட்சிக்குள் இருக்கும் ஒட்டுமொத்த சீனியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…