அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான வி.கே. சசிகலா, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, ஏழைகளின் நலனுக்காகவும், ஜெயலலிதாவின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும் புதிய கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார். நீண்டகாலமாகத் தனிப்பட்ட முறையில் ஆதரவாளர்களைச் சந்தித்து வந்த அவர், தற்போது முறைப்படி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இருப்பினும், தான் தொடங்கிய புதிய கட்சியின் பெயரை அந்த தருணத்தில் அவர் உடனடியாக வெளியிடவில்லை. கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, கட்சியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பின்னர் வெளியிடுவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் சசிகலா கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார். அதன்படி அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் செயல்படும் என கூறியுள்ளார். தென்னந்தோப்பு சின்னத்தில் அக்கட்சிப்போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு வெள்ளை சிவப்பு நிறத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த கட்சி போட்டியிடுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…