Categories: சினிமா

‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்தை முடித்து வைத்த சரத்குமார்… விஜய் மில்டன் நெகிழ்ச்சி பதிவு…

Spread the love

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இன்பினிட்டி பிலிம் ப்ரொடெக்ஷன் கீழ் கமல் போஹ்ரா மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான உடனேயே இயக்குனர் விஜய் மில்டன் ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியது என்னவென்றால், இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். இந்த படத்தில் ஹீரோ எங்கிருந்து வருவார்? எப்படி வருவார்? எதற்காக வருவார்? போன்ற கேள்விகளை சஸ்பென்ஸ் ஆக வைத்தேன். இது இந்த படம் முழுவதும் பயணமாகும். இறுதியில் அந்த சஸ்பென்ஸ் உடைக்கப்படும். அப்படித்தான் நான் படத்தை இயக்கியிருந்தேன்.

ஆனால் இப்போது தியேட்டர்களில் ரிலீசான பிறகு படத்தின் ஆரம்பத்தில் ஒரு நிமிட காட்சியை இணைத்திருக்கிறார்கள். அதில் ஹீரோவை பற்றி ஒரு முன்னோட்டத்தை சொல்லி இருக்கிறார்கள். அந்த ஒரு நிமிட காட்சியை பார்த்து விட்டால் பிறகு படம் முழுவதும் நான் பட்ட கஷ்டங்கள் எதுவுமே பெரிய பலன் இல்லாமல் போய்விடும். முதலிலேயே சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டால் மக்களுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடும். இந்த ஒரு நிமிட காட்சியை யார் படத்தில் இணைத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை படத்தில் இணைத்துள்ளார்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் ஆனது இணையவாசிகளுக்கிடையே பேச்சு பொருளாக மாறியது. படம் எடுத்த இயக்குனருக்கு தெரியாமல் எப்படி காட்சிகளை இணைத்தார்கள் என்று பேசி வந்தனர். இந்நிலையில் இன்று விஜய் மில்டன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இன்று வெளியிட்ட வீடியோவில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு மக்களாகிய நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. நிறைய நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்றீங்க கேட்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இப்போது அந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது.

அந்த ஒரு நிமிட காட்சியை நீக்குவதற்கு மிக முக்கியமான காரணம் சரத்குமார் சார் தான். அவர்தான் எனக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடுவில் இரண்டு பக்கமும் பொதுவாக பேசி இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் இல்லை என்றால் இது சாத்தியமே இல்லை.சரத் சார் நீங்கள் செய்த இந்த பெரிய உதவிக்கு ரொம்ப நன்றி. உங்கள் பேச்சை எப்பவும் நாங்கள் மீறவே மாட்டோம் என்று கூறி நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

4 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

4 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

4 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

4 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

5 மணத்தியாலங்கள் ago