மதுரை சுந்தரராஜபுரம் நியூ ரைஸ் மில் பகுதியை சேர்ந்த தங்கம் என்ற விவசாயி தன்னுடைய மகளின் தை மாத திருமணத்திற்காக சுமார் 25 பவுன் தங்க நகைகளை வீட்டில் சேமித்து வைத்திருந்தார். அந்த நகைகள் அனைத்தையும் அவர் சிறிய தலையணை பைக்குள் மறைத்து வைத்திருந்தார். இதனிடையே வீட்டை சுத்தம் செய்யும் போது பழைய துணிகளுடன் அந்த தலையணையையும் தெரியாமல் குப்பை தொட்டியில் கொட்டி விட்டனர். சிறிது நேரம் கழித்து நகை நினைவுக்கு வந்ததும் குப்பைத்தொட்டியை தேடியதும் அதில் கிடைக்கவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த விவசாயி தங்கம் உடனடியாக துப்புரவு மேற்பார்வையாளர் மருது பாண்டியனை தொடர்பு கொண்டு காணாமல் போன நகைப் பற்றி தகவல் தெரிவித்தார். உடனடியாக செயல்பட்ட மேற்பார்வையாளர் மருது பாண்டியன் தூய்மை பணியில் இருந்த ஊழியர்களுக்கு இந்த தகவலை தெரிவித்தார். அப்போது பணியில் இருந்த மீனாட்சி என்பவர் குப்பையில் தேடிக் கொண்டிருந்தபோது அந்த தலையணை கண்ணில் பட்டுள்ளது. அதை திறந்து பார்த்தபோது 25 பவுன் நகைகள் இருப்பதை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
உடனடியாக மீனாட்சி மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்த நிலையில் நகை உரிமையாளரான விவசாயிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. வாழ்நாள் சேமிப்பாகவும் மகளின் திருமணத்திற்காகவும் வைத்திருந்த நகையும் மீண்டும் கைக்கு கிடைத்த மகிழ்ச்சியில் விவசாயி தங்கம் கண்கலங்கி தூய்மை பணியாளர் மீனாட்சிக்கு நன்றி தெரிவித்தார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர் மீனாட்சிக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…