பிரபல சீரியல் நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஆகிய இருவரும் கலந்த ஏழு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் 15 நாட்களிலேயே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இவர்களின் இந்த பிரிவிற்கு சம்யுக்தாவின் அப்பா தான் முழு காரணம் என்று விஷ்ணுகாந்த் கூறியிருந்தார்.

அதே சமயம் இருவரும் லைவில் மாறி மாறி குற்றம் சாட்டி ஒரு கட்டத்தில் விஷ்ணுகாத் ஒரு காம கொடூரன் என்று சம்யுக்தா பலவித உண்மைகளை உடைத்தார். இவர்களின் இந்த விவகாரத்தை பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது காதலித்த நிலையில் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் பிரிந்து விட்டனர். தற்போது சம்யுக்தா முத்தழகு என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் சம்யுக்தா விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் பலவித உண்மைகளை வெளிப்படையாக இணையத்தில் கூறி வருகிறார். அதன்படி தற்போது அவர் ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
