#image_title
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சமுத்திரக்கனி. 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்த சமுத்திரக்கனி திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நுழைந்து பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அப்போது பாலச்சந்தர் சீரியல்கள் இயக்கிக் கொண்டிருந்த காலம்.
பாலச்சந்தரின் சீரியல்கள் சிலவற்றிலும் சமுத்திரகனி நடித்துள்ளார். தொடர்ந்து கே பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை எஸ் பி பி சரண் நடித்து தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்விப் படமாக அமைந்தது.
அதன் பின்னர் அவர் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானாலும் ஹிட்டாகவில்லை. விஜயகாந்த் அப்போது அவருடைய கேரியரின் மங்கு திசையில் இருந்ததும் ஒரு காரணம். இதனால் சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த சமயத்தில் அவர் கௌரவம் பார்க்காமல் இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் இணை இயக்குனராக மீண்டும் சென்று பணியாற்றினார். இது சம்மந்தமாக இயக்குனர் அமீர் ரெண்டு படம் இயக்கிவிட்டு ஏன் மீண்டும் வந்து இணை இயக்குனராகப் பணியாற்றுகிறாய் எனக் கேட்டபோது “இதுபற்றி அமீர் கேட்ட போது “இல்லண்ண, நான் எங்கேயோ தப்பு பண்றேன். நான் இன்னும் கத்துக்க வேண்டியது இருக்கு” என சொல்லியுள்ளார்.
அதெ போல பருத்திவீரன் பண்ணிவிட்டு அவர் இயக்கிய நாடோடிகள் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னர் இயக்குனராகவும் நடிகராகவும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சமுத்திரக்கனி எட்டினார் என்பது பலரும் அறிந்ததே.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…