நகரும் இரயில் ஒன்றில் சமோசா விற்கும் நபர், தான் விற்க வைத்திருந்த சமோசா கூடையின் (தட்டின்) மீது தனது கால்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வாச்பேசின் அருகே ரயிலின் நுழைவாயில் பகுதியில் அமர்ந்திருக்கும் அந்த நபர், மொபைல் போனில் பேசிக்கொண்டே தான் விற்கும் சமோசாக்கள் மீது அசால்ட்டாகக் காலை வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்களில் விற்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து பயணிகள் தங்களது கடுமையான கண்டனங்களையும் அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமானதை அடுத்து, இந்திய இரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. முதற்கட்ட விசாரணையின்படி, கடந்த மே 20 முதல் மே 22 வரையிலான காலகட்டத்தில் 12809-10 எண் கொண்ட அந்த இரயிலில் அப்படிப்பட்ட நபர் யாரும் அதிகாரப்பூர்வ உணவு விநியோக ஊழியராக நியமிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அதாவது, வீடியோவில் இருக்கும் நபர் இரயில்வே அனுமதியின்றி சட்டவிரோதமாக ரயிலுக்குள் நுழைந்து வியாபாரம் செய்த ஒரு வெளிநபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இரயில்வே நிர்வாகம் தனது உணவு உரிமதாரர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இரயிலுக்குள் இதுபோன்ற அனுமதியற்ற வெளிநபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாராவது உணவுகளை விற்க முயன்றால், உடனடியாக அதுகுறித்து இரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நிகழ்நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இதுபோன்ற சுகாதாரக் கேடான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கவும் இரயில்வேயில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…