ரூ.291 கோடி செலவில் சேலத்திற்கு வரும் புதிய ஆபத்து…. 30 கி.மீ தூரத்திற்கு பரவப்போகும் கொடிய நோய்?…. பகீர் கிளப்பிய அன்புமணி… வெளியான பரபரப்பு அறிக்கை…..!

Spread the love

சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்குப் மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேட்டையும் சுற்றுச்சூழல் பேரழிவையும் ஏற்படுத்தும் என்பதால், இதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகெங்கிலும் தோல்வியடைந்த இத்தகைய குப்பை எரிஉலை திட்டங்களுக்கு பல வளர்ந்த நாடுகள் தடை விதித்துள்ளன. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் ஒன்றாக எரிக்கப்படும்போது, காற்றில் டையாக்சின், சல்பர் டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், ஃபியூரன் மற்றும் PM 2.5 போன்ற கொடிய நச்சுத் துகள்கள் வெளியாகின்றன. நிலக்கரி மின்நிலையங்களை விடவும் அதிகளவில் நச்சுக்களை உமிழும் இந்த ஆலையால் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், இருதய நோய்கள், தோல் பாதிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு நரம்பு சார்ந்த கோளாறுகள் ஏற்படக்கூடிய ஆபத்து நிலவுகிறது.

இத்திட்டத்திற்காக சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் லாரிகள் மூலம் கழிவுகள் கொண்டு வரப்படும். இவ்வாறு ஈரக்கழிவுகள் சாலைவழியாக நீண்ட தூரம் கொண்டு வரப்படுவதால் செல்லும் வழியெங்கும் துர்நாற்றமும் நோய்ப்பரவலும் அதிகரிக்கும். மேலும், இந்த ஆலைக்கு தினமும் தேவைப்படும் ஒன்றரை லட்சம் லிட்டர் நீரை நிலத்தடியிலிருந்து உறிஞ்சுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே ஜாகிர் அம்மாபாளையத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் ஜவுளிப் பூங்காவில் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கவுள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் இரசாயனக் கழிவுகளால் அப்பகுதியின் நிலமும் நீரும் நஞ்சாகும் சூழலில், தற்போது அதே இடத்தில் குப்பை எரிஉலையும் அமைப்பது சுமார் 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும். நிலம், நீர், காற்று என மூன்றையும் ஒரே நேரத்தில் மாசுபடுத்தும் இத்தகைய திட்டங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமமாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த அழிவுத் திட்டத்தை தற்போதைய அரசும் தொடர்ந்து செயல்படுத்தத் துடிப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அவர்களுக்கே பேராபத்தை விளைவிக்கும் திட்டங்களைத் திணிப்பதற்கு பதிலாக, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி திடக்கழிவுகளை முறையாகத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் முறைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எனவே, சேலம் மற்றும் திருநெல்வேலியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள குப்பை எரிஉலைத் திட்டங்களை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கழிவுகளை மக்கக்கூடியவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை என தனித்தனியாகப் பிரித்து சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளை முழுமையாகச் நடைமுறைப்படுத்துவதே சேலம் மாநகரத்தையும் தமிழகத்தையும் பாதுகாக்கும் சரியான தேர்வாக இருக்கும்.

Nanthini

Recent Posts

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

2 minutes ago

“ஏ அள்ளு அள்ளு… ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது”…. நெடுஞ்சாலையில் பாய்ந்த பால் ஆறு…. ஓடோடி வந்து குடங்களில் அள்ளிய மக்கள்…. வைரலாகும் வீடியோ…!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…

10 minutes ago

25 நாளா ஏன் அமைதி?… “வீரமணி வழக்கில் யாருடன் டீலிங் பேசினார் விஜய்?”…. ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் ரகுபதி….!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கை திமுக கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்களுக்காகவே காத்திருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ரகுபதி சென்னையில் செய்தியாளர்களிடம்…

15 minutes ago

FIR-ல் பெயர் வராமல் இருக்க பல கோடி ரூபாயா?…. ஜெம் கிரானைட்ஸ் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை…. கொந்தளித்த வானதி சீனிவாசன்….!

தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளும், விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும்…

20 minutes ago

கம்யூனிஸ்ட்டுகளுக்கு செக் வைத்த CM விஜய்…. பனையூரில் இரவோடு இரவாக போடப்பட்ட ஸ்கெட்ச்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கம்யூனிஸ்ட்…

27 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த பேரடி…. கொத்து கொத்தாக வெளியேறும் நிர்வாகிகள்…. இபிஎஸ்க்கு தலைவலி தந்த அம்பத்தூர்-ஆவடி…. போஸ்டரில் தூக்கப்பட்ட மா.செ படம்….!

2016-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக சந்தித்த உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago