தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களில் பல சாதனைகளைப் படைத்தவர் எஸ் ஜானகி. இவரது குரலில் வரும் பாடல்களை கேட்டு ரசிகர்கள் மெய்மறந்து போவார்கள். பெண் கதாபாத்திரங்கள் சோகமாக பாடும் பாடல் என்றால் இசையமைப்பாளர்களின் முதல் சாய்ஸ் ஜானகி அம்மாதான். இளையராஜா இசையில் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் எவர்க்ரீன் கிளாசிக் ஹிட்களாக இப்போது வரை சிலாகிக்கப்படுகின்றன. இளையராஜாவுக்கு அதிகப் பாடல்களை பாடிய பெண் பாடகர் என்றால் அது ஜானகிதான்.
ஆந்திராவை பூர்விகமாக கொண்ட எஸ்.ஜானகி பல இசை நிகழ்ச்சிகளில் முதலில் பாடினார். எஸ்.ஜானகி மேடைப்பாடகியாக இருந்த போது அவரின் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவரின் மகனான ராம்பிரசாத் என்பவர் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
ஜானகியின் திறமை வெறும் இசைக்கச்சேரியோடு முடிந்து விடக்கூடாது. திரைத்துறைக்கும் வர வேண்டும் என ராம்பிரசாத்தான் அவரை ஊக்குவித்தாராம். அவரது ஆலோசனைப்படி ஜானகியும் கேட்டாராம். அப்படித் தான் ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தாராம். முதலில் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கில் சில பாடல்களைப் பாடியிருந்தாலும் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அப்போதுதான் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த பாடல் கிடைத்தது. எஸ் எம் சுப்பையா நாயுடு இசையில் கொஞ்சும் சலங்கை என்ற படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை பாடவைக்க அப்போது உச்சத்தில் இருந்த பி சுசீலாவை அழைத்துள்ளனர். அவர் வந்து வரிகளையும் மெட்டையும் கேட்ட பின்னர் என்னால் இந்த பாடலை பாட முடியாது என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அதன் பிறகுதான் இந்த பாடலை பாட எஸ் ஜானகியை அழைத்துள்ளனர். அவரும் வந்து அந்த பாடலை சிறப்பாகப் பாடிக் கொடுத்தாராம். அந்த பாடல் வெளியான பின்னர் ஜானகி புகழின் உச்சத்தைத் தொட்டார்.
ஜானகியின் பல திறமைகளில் ஒன்று நடிகர்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றிப் பாடுவது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகளிர் மட்டும் படத்தில் இளையராஜா இசையில் அவர் “காள மாடு ஒன்னு கறவ மாடு” என்ற பாடல். இந்த பாடலில் நாசருடன் இணைந்து ரேவதி, ரோஹினி மற்றும் ஊர்வசி ஆகிய மூவரும் நடித்திருப்பார்கள். அவர்கள் மூன்று பேருக்கும் மூன்று வேறு வேறு குரல்களில் பாடி மூன்று பாடகிகள் அந்த பாடலைப் பாடியது போன்ற உணர்வை ஜானகி ஏற்படுத்தியிருப்பார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…