Categories: சினிமா

கமல் சார் மிகப்பெரிய கலைஞன்.. ஆனா அவர்கிட்ட இந்த பிரச்சன இருக்கு.. உத்தம வில்லன் சோகக் கதையைப் பகிர்ந்த லிங்குசாமி!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு தனி பல்கலைக்கழகமாக விளங்குபவர் கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் கமல்ஹாசன் நடிப்பு, இயக்கம், திரைக்கதை, பாடல் மற்றும் நடனம் என தொடாத துறைகளே இல்லை என சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார். ஆனால் அவர் எடுத்த சில பரிசோதனை முயற்சிப் படங்கள் படுதோல்வி அடைந்து பல தயாரிப்பாளர்களைக் காவு வாங்கியுள்ளன.

அதற்கு சமீபத்தைய உதாரணங்கள் ஆளவந்தான் எடுத்த தாணு முதல் உத்தம வில்லன் எடுத்த லிங்குசாமி ஆகியோரை சொல்லலாம். உத்தம் வில்லன் படத்தை எடுத்ததில் அடைந்த நஷ்டத்தால் இன்றளவும் திரைத்துறையில் பல பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறார் லிங்குசாமி.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் உத்தம வில்லன் படம் எப்படி தங்கள் நிறுவனத்திடம் திணிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். அதில் “நாங்களாக விருப்பப்பட்டுதான் கமல்சாரை வைத்து படம் தயாரிக்க சென்றோம். அவர் அருமையான ஒரு கமர்ஷியல் கதையை சொன்னார். எங்களுக்குப் பிடித்திருந்தது.  ஆனால் அவரிடம் ஒரு பிரச்சனை உள்ளது. ஆனால் அவர் அடிக்கடி மனதை மாற்றிக்கொண்டே இருப்பார்.

அப்படிதான் உத்தமவில்லன் கதையை சொன்னார். நாங்கள் இது கமர்ஷியலாக பெரிதாக போகாது என்று சொன்னோம். என்னை நம்புங்கள். இது என் கனவுப்படம் என்று சொல்லி எடுத்தார். படம் பார்த்துவிட்டு நாங்கள் நிறையத் திருத்தங்கள் சொன்னோம். முதலில் மாற்றுவதாக சொன்ன அவர் பின்னர் மாற்ற மாட்டேன் என்றார். ஒருவேளை அந்தக் கரெக்‌ஷன்களை சொல்லி இருந்தால் நல்ல படமாகக் கூட வந்திருக்கும். இந்த படத்தால் உங்களுக்கு நஷ்டம் வந்தால் மீண்டும் 30 கோடி ரூபாயில் ஒரு படம் பண்ணித் தர்றேன் என்றார். நாங்களும் அதற்காகக் காத்திருக்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

16 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

25 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

26 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

32 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

39 minutes ago