Categories: சினிமா

கதைய முதல்லயே சொல்லிட்டா எப்படி சார்..? அதுக்கு எஸ் ஜே சூர்யா சொன்ன பதில்… குஷி படத்தை ஹிட்டாக்கிய சாமார்த்தியம்!

Spread the love

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

kushi movie scene

இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அதன் பின்னர் வாலி படத்தை இயக்கி அஜித்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார். அந்த படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி மரியா அந்த படம் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “குஷி படத்தின் கதை என்ன என்பதை நான் முதலிலேயே சொல்லிவிடப் போகிறேன்” என சூர்யா சொன்னதும் எல்லோருமே பயந்தோம். கதையை சொல்லிவிட்டால் எப்படி ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகும் எனக் கேட்டோம்.

Actor and director Ravi maria

அதற்கு அவர் “இது ஒரு எளிமையான கதைதான். அதை முதலிலேயே சொல்லிவிட்டால் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்க்க மாட்டார்கள். அதுவே நம் படத்துக்கு பாசிட்டிவ்வாக அமையும் எனக் கூறினார்.”என தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போலவே குஷி திரைப்படம் தமிழில் மட்டும்  இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பிற மொழிகளிலும் ரீமேக் ஆகி ஹிட்டானது.

 

vinoth

Recent Posts

BIG BREAKING: போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர்..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…

30 seconds ago

வெட்கமே இல்லையா? கண்ணாடியைப் பார்த்தாவது திருந்துங்க.. மைசூரு மாநகராட்சியின் நூதன முயற்சியை மதிக்காத நபர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது…

4 minutes ago

“விபத்தா? அல்லது சினிமா படப்பிடிப்பா?”… சிக்னல் கம்பத்தின் உச்சியில் மோட்டார் சைக்கிள்… மரணத்தை முத்தமிட்டு மீண்ட ஓட்டுநர்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே டெல்டா எல்லையில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.…

13 minutes ago

B.SC (Nursing) முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு.. ராணுவ வாகன Nigam Limited நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்.!!

சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்ந்த ராணுவ வாகன நிகாம் லிமிடெட் (AVNL) நிறுவனத்தில்…

15 minutes ago

“நாய் கடித்ததால் இப்படியா செய்வது?”.. தெருநாயை கற்களால் அடித்துக் கொன்ற கும்பல்… ஜம்முவில் அரங்கேறிய கொடூரக் கொலை… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!!

ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…

25 minutes ago

நெஞ்சே பதறுது..! குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் காத்திருந்த ஷாக்.. அதிர்ச்சியில் உறைந்த விமான நிலைய அதிகாரிகள்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…

35 minutes ago