நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து மோகன்லால் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக வலம் வரும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார். யுவன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் களமிறங்கியிருக்கின்றார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். அதற்கான வேலைகளை எல்லாம் செய்து வருகின்றார். அடுத்த படத்தை யார் இயக்குவது எந்த நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது என்பது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் கிடைத்த தகவலின் படி நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்க இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கு இடையில் மற்றொரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து ஜில்லா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் இந்த இருவரின் கூட்டணியில் படம் உருவாக உள்ளதாக தகவல் பரவி வருகின்றது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
