தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க… புதிய மாஃபியா… ஒரு ரீல்ஸ்க்கு ரூ.400 ரேட்… வாடகை அக்கவுண்ட்டில் ஆட்டம் போட்ட கும்பல்… இறுதியில் நேர்ந்த ட்விஸ்ட்…!!

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பழிவாங்கும் வகையிலான பதிவுகளும் மிரட்டல் வீடியோக்களும் பரவி வருகின்றன. குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் வெளியானதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மோதல்களைத் தூண்டும் நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில், குற்றப் பின்னணி இல்லாத சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை வாடகைக்கு எடுத்து, அவற்றின் மூலம் வன்முறையைப் பிரதிபலிக்கும் ரீல்ஸ் மற்றும் மிரட்டல் பதிவுகளை வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வீடியோவைப் பதிவிடுவதற்கு ரூ.400 வரை பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில் இடம்பெற வேண்டிய வசனங்கள், பின்னணி இசை மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட விவரங்களையும் சிலர் முன்கூட்டியே வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தங்களது அடையாளத்தை மறைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் மோதல்களைத் தூண்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளக் கணக்குகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வன்முறையைத் தூண்டும் பதிவுகள் தொடர்பாக 44 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறிய தொகைக்காக வன்முறையைப் பரப்பும் பதிவுகளை வெளியிடுவது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Gayathri

Recent Posts

டேய் எழும்புங்கடா… சிறுத்தை வருது… தூங்கிய தொழிலாளர்களைத் தாக்க வந்த சிறுத்தை… நொடியில் காப்பாற்றிய கார் ஹார்ன் சத்தம்… மகாராஷ்டிராவில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கிச் சிறுத்தை ஒன்று மெல்லப் பாய்ந்து வர முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

2 minutes ago

எங்க மோட்டாரை தூக்கறியாடா?… நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ டிரைவர்… CCTV -யை பார்த்து ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தெருவின் சந்துக்குள் தனது ஆட்டோவை திடீரென நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர்…

8 minutes ago

ஐயோ கடவுளே… கார விட்டு வெளியே வர முடியலை?… நடுவழியில் தீப்பற்றி எறிந்த கார்… 4 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், சாங்கெஷ்ரா கிராமத்திற்கு அருகே அக்டோபர் 25 அன்று இரவு காரொன்று பள்ளத்தில் விழுந்து…

16 minutes ago

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

2 மணத்தியாலங்கள் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

2 மணத்தியாலங்கள் ago