தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை நோக்கி திமுக ஐடி விங் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் சூத்திரதாரியாகச் செயல்பட்ட ‘ஜான் பிரிட்டோ’ என்பவர், தற்போதைய தவெக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய கடத்தல் நெட்வொர்க் செயல்பட்டிருப்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர்கள் சாடியுள்ளனர்.
“தூய சக்தி” என்ற முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த இந்த அரசு, தற்போது இளைஞர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் “போதை சக்தியாக” மாறிவிட்டதா என்று திமுக ஐடி விங் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த சர்வதேச போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வெற்றிக்கும், அவர்களின் தேர்தல் நிதிக்கும் முதலீடு செய்யப்பட்டதா என்ற கடுமையான விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் உடனடியாக மௌனம் கலைத்து, பொதுவெளியில் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பு வலியுறுத்தியுள்ளது.
சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…