தமிழக முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இது புதிய அரசின் முதல் பட்ஜெட் தயாரிப்பு என்பதால், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான புதிய முதலீடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கான தேதியும் இக்கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தமிழகப் பெண்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மாற்றாக, தவெக-வின் தேர்தல் வாக்குறுதியான இந்த 2500 ரூபாய் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஆதாரங்கள், பயனாளிகள் தகுதி மற்றும் முன்னுரிமைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இத்திட்டத்துடன் சேர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமண உதவித்தொகையாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு ரூ 20 லட்சம் வரை கல்விக்கடன், மற்றும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ 4000 மாத உதவித்தொகை போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான நலத்திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முறையான அறிவிப்புகள் பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…