தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் நடைபெற்ற ரூ.100 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக, திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் அருள் முருகனிடம் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் சேகரிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் காவல் குழுவினர் தங்கள் விசாரணையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளனர்.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, நகர் ஊரமைப்புத் துறை அனுமதி மற்றும் இதர அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய B.T. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 16-ஆம் தேதி அன்பில் மகேஷிற்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில், தற்போது அவரது உதவியாளரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…