2007-ஆம் ஆண்டு திருவொற்றியூரில் நடந்த பாண்டியமணி என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து 19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 39 வயதான பிரபல ரவுடி ஷேக் அப்துல்லாவைச் சென்னை காவல்துறை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிரடியாகக் கைது செய்துள்ளது.
ஜாமீனில் வெளிவந்த அப்துல்லா 2010-க்குப் பிறகு பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். காவல்துறையினர் இவரது ஆதார், பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் கொண்டு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, 2007-ல் எடுக்கப்பட்ட அவரது பழைய புகைப்படத்தைக் கொண்டு, 19 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எப்படிப்பட்ட தோற்றத்தில் இருப்பார் என்பதைக் கணிக்கும் ஏஐ மென்பொருளைப் பயன்படுத்தினர்.
அதன் மூலம் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படங்களை வைத்துச் சமூக வலைதளங்களில் தேடியபோது, அவரது ஃபேஸ்புக் கணக்கு கண்டறியப்பட்டது. அதை வைத்துத் திருமுல்லைவாயிலில் வசித்து வந்த அவரைச் சூளைமேடு பகுதியில் வைத்து தீவிர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி ‘சிங்காரவேலன்’ பட பாணியில் ஏஐ தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய சென்னை காவல்துறையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…