Categories: சினிமா

“போனதை பத்தி யோசிக்காதீங்க”… கணவரை பிரிந்ததை உறுதிப்படுத்திய ரோஜா சீரியல் நடிகை…? அவரே வெளியிட்ட வீடியோவால் ஏற்பட்ட குழப்பம்…

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘ரோஜா’. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது. பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகி ஆக நடிகை பிரியங்கா நல்காரி நடித்தார்.

தனது முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் நடிகை பிரியங்கா. இவர் தனக்கு என்று தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியலிலும் ஹீரோயினியாக நடித்து கலக்கினார். இதனிடையே இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்தத் தொடரில் இருந்துபாதியிலேயே விலகி விட்டார்.

தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்ற  சீரியலில் நடிகை பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதல் செய்து வந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. அந்த நேரத்தில் திடீரென மலேசியாவில் அவரது திருமணம் நடந்து முடிந்தது.

அதில் அவரது பெற்றோர் கூட கலந்து கொள்ளவில்லை. திருமணம் முடிந்து ஓராண்டு கூட முடியாத நிலையில் தற்போது அவர்கள் பரிந்து விட்டதாக செய்தி இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா நல்காரி உருக்கமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், ‘போனதை பத்தி யோசிக்காதீங்க. போனது போனது தான். அதை பற்றி நினைக்காதீங்க. அடுத்து என்னனு யோசிங்க. Present தான் முக்கியம். அதை மட்டும் என்ஜாய் பண்ணுங்க’ என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் அவர் தனது கணவரை பிரிந்ததை உறுதிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

7 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

13 minutes ago

“மொபைல் போனில் வந்த ‘அந்த’ புகைப்படம்”… திருமண வீட்டை மரண வீடாக மாற்றிய சைபர் சைக்கோ…. மகளுடன் சேர்ந்து விஷம் குடித்து உயிரை மாய்த்த பெற்றோர்…!

மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…

22 minutes ago

634 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செக் வைத்த விஜய் அரசு… ஜூலை 10-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…

30 minutes ago

அதிமுக-வை அசிங்கப்படுத்திய விஜய்.. கோபப்படாமல் ‘நைஸ் ஸ்பீச்’ சொன்ன வேலுமணி… ஒரே நாளில் மாறிய தமிழக அரசியல் களம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…

40 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த ஹாட் ஏர் பலூன்.. பிரேசிலில் 8 பேர் உடல்கருகி பரிதாப பலி – பதைபதைக்க வைக்கும் பகீர் விபத்து..!!

பிரேசில் நாட்டின் சாண்டா கதரீனா மாகாணத்தில் உள்ள பிரையா கிராண்டே பகுதியில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஹாட் ஏர் பலூன்…

43 minutes ago