#image_title
சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகினி வசமாக சிக்கிக் கொண்டதால் விஜயா ரோகினியை வச்சு செய்து விட்டார். இரண்டு அடி அடித்தும் விட்டார். அடுத்ததாக மனோஜிடம் வந்து உனக்காக நான் எல்லாம் பண்னேன் ஆனா நீ என்ன மாட்டிவிட்டுட்டு தப்பிச்சிட்ட என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு கிளம்புகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் ரோகினி வீட்டை விட்டு கிளம்புகிறாள். மனோஜ் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். இதற்கிடையில் அண்ணாமலையும் விஜயாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை நீ என்ன இருந்தாலும் ரோகினியை அடிச்சது தப்பு 3 மருமகளையும் ஒரே மாதிரி நினை என்று அறிவுரை கூறுகிறார். மனோஜ் வந்து விஜயாவை கூப்பிட்டு அம்மா ரோகிணி எங்க போறேன்னு சொல்லாம கிளம்பி போயிட்டாம்மா எனக்கு பயமா இருக்குமா என்று கூறுகிறார்.
உடனே விஜயா போனவளுக்கு வர தெரியும் நீ பேசாம இரு என்று கூறி விடுகிறார். அடுத்ததாக ரோகிணி தன் அம்மாவின் வீட்டுக்கு சென்று அம்மாவின் மடியில் படுத்து அழுகிறாள். ரோகிணியின் அம்மா ரோகினிக்கு பல அறிவுரைகளை கூறுகிறார். உன் மாமியாருக்கு எதுக்கு கோபம் வந்து இருக்கு மனோஜ் இந்த மாதிரி தப்பு வழக்கமா பண்ணுவாரு, நீ பொய் சொன்னது தான் உங்க மாமியாரால ஏத்துக்க முடியல அதனால தான் இப்படி கோபப்பட்டு இருக்காங்க. ஆனா நீ என்ன நடந்து இருந்தாலும் நீ வந்து இருக்க கூடாது. அது இன்னும் அவங்கள அதிகமா தான் கோபப்படுத்தும்.
உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் அப்படிங்கறதுக்காகத்தான் நான் சொல்றேன் என்று சொன்னவுடன் ரோகிணி தன் வீட்டிற்கு செல்கிறாள். சென்றவுடன் யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை. விஜயா ரூமுக்கு சென்று விஜயாவிடம் ஆன்ட்டி நான் மனோஜுக்காக தான் எல்லாம் பண்ண மனோஜ் வந்து நல்ல முறையில இருக்கணும் எல்லா முன்னாடி நல்லா மரியாதையா இருக்கணும் தான் நான் பண்ணேன்.
நான் அந்த பணத்தை வைத்து எனக்காக துணி மணியோ நகையோ எதுவுமே நான் வாங்கலையே என்று கூறுகிறார். உடனே விஜயா மறுபடியும் மறுபடியும் நீ உன் மேல இருக்க தப்பா மறைக்கிறதுக்கு நீ அவனை சொல்றியா என்ன இருந்தாலும் என்கிட்ட நீ உண்மைய மறைச்சிருக்க கூடாது என்று சத்தம் போட்டு அனுப்பி விடுகிறார். அடுத்ததாக சுருதியும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். வர வர ஆன்ட்டி சீரியல்ல வர மாமியார் மாறி ஆயிட்டு இருக்காங்க நம்ம கவனமா இருக்கணும் என்று சுருதி கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. அடுத்த வாரம் ரோகிணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…