பிரபல கன்னட நடிகரான யாஷ் தற்பொழுது இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவரை அந்த அளவிற்கு உயர்த்தியது 2018 இல் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படம் தான். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் இவர் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.குறிப்பாக இத்திரைப்படம் உலகம் எங்கும் 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார்.
இவர் நடிப்பின் மீது கொண்ட தீராத ஆர்வம் காரணமாக காரணமாக 12-ம் வகுப்பு முடித்த கையோடு 300 ரூபாயுடன் பெங்களூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து பல டிராமாக்களில் நடித்த இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் 2007 இல் ஜம்படா ஹுடுகி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். இவரது திரை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘மோகினி மனசு’. இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதைத் தொடர்ந்து ராக்கி, கல்லற சந்தே, கோகுலா, மோடலசாலா, ராஜதானி என்ற படமும், களவாணி படத்தின் ரீமேக்கான கிரட்டகா, சுந்தரபாண்டியன் ரீமேக்கான ‘ராஜாஹூளி’ , ‘கஜகேசரி’, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, சந்து ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’, கே.ஜி.எஃப் 2 என அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இவர் 2016ல் ராதிகா பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் யாஷ் மற்றும் ராதிகா பண்டிட் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தற்பொழுது நடிகர் யாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பீச்சில் ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்ளோ பெரிய பிள்ளைகளா?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…
கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…