“நீ என்ன போலீசா?”… “என் வண்டியையா தொடுற?”…. நடுரோட்டில் காரையும் லாரியையும் மறித்து பெண் செய்த வேலை… வைரலாகும் பரபரப்பு காட்சி….!

Spread the love

சென்னை அம்பத்தூர் – புழல் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளம் பெண்கள் சிறிய அளவிலான விபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நடுரோட்டில் பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த கையோடு வாகனத்தைச் சாலையின் நடுவிலேயே நிறுத்திய அப்பெண்கள், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் ஆக்ரோஷமாகத் தகாத வார்த்தைகளால் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

https://www.instagram.com/reel/Dca8O-ETE_x/?utm_source=ig_embed&utm_campaign=loading

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு அங்கிருந்த பொதுமக்கள் சிலர் சாலையை அடைத்துக் கொண்டிருந்த ஸ்கூட்டரை ஓரமாக நகர்த்த முயன்றபோது, அப்பெண்கள் அவர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் ஸ்கூட்டர் கீழே சாய, ஆத்திரமடைந்த ஒரு பெண் காலணி கூட இல்லாமல் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, அவ்வழியே வந்த லாரி, பேருந்து மற்றும் கார்களை மறித்து தொடர்ந்து கூச்சலிட்டுப் பொதுமக்களுக்குக் கடும் இடையூறு விளைவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துக் காவலர் நிலைமையைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீர்செய்யவும் முயன்றார். இருப்பினும், சீருடையில் இருந்த காவலரையும் மதிக்காமல் மிக அருகில் சென்று ஒருமையில் பேசிய அப்பெண், கைதட்டி ஏளனம் செய்து அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், மீண்டும் ஓடும் வாகனங்களுக்கு முன்பாகச் சென்று நின்று போக்குவரத்தை முற்றிலும் முடக்கினார்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இந்த முழு சம்பவத்தையும் அங்கிருந்தவர்கள் தங்கள் கைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சீருடைப் பணியாளரையும் பொதுமக்களையும் அவமதித்து ரகளையில் ஈடுபட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த அப்பெண்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

டம்மி போஸ்டிங் கொடுத்து ஸ்கெட்ச் போட்ட அரசு… அக்டோபர் 1-ல் சார்ஜ் எடுக்கும் ராதாகிருஷ்ணன்…. அடுத்து என்ன நடக்கப்போகிறது?…. காத்திருக்கும் டுவிஸ்ட்….!

பணி ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை,…

1 minute ago

அன்புமணிக்கு வந்த சீக்ரெட் கால்….. “எதிர்ப்பை விட்டுட்டு வாங்க”…. பாய்ந்த தூது…. தவெக போட்ட மாஸ்டர் பிளான்…. அதிரும் தமிழக அரசியல்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க திமுக…

11 minutes ago

நான் மட்டும் அந்த உண்மையை சொன்னா…. “ராதா கண்டிப்பா ஜெயிலுக்கு போவாரு”… அம்பிகாவின் பரபரப்பு வாக்குமூலம்… திரையுலகில் அதிர்ச்சி…..!

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…

18 minutes ago

FLASH NEWS: ஜெம் வீரமணி வீட்டில் அதிரடி ரெய்டு…. சற்றுமுன் பரபரப்பு….!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…

27 minutes ago

“அடேங்கப்பா…. முதல்வர் விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…. செளமியா அன்புமணிக்கு டபுள் ஜாக்பாட்?”… நள்ளிரவில் நடந்த மாஸ் மீட்டிங்….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…

32 minutes ago

“விஜய்யுடன் மேடையேறத் தடை?”…. கூட்டணியை அலறவிட்ட தவெக தலைமை…. கடுப்பில் திருமாவளவன், வைகோ….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…

39 minutes ago