#image_title
நடிகை ரித்விகா பரதேசி திரைப்படம் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட திரைப்படங்களில் ரித்விகா நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரித்விகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இந்த நிலையில் நடிகை ரித்விகா பெட்டியில் கூறியதாவது, யூனியன் மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் என்ன முடிவு எடுக்கலாம் என்று தெரியும்.
ஹேமா கமிட்டி போன்ற தமிழ் திரை உலகிலும் கமிட்டி அமைக்க வேண்டுமா என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இங்க தவறு நடந்திருந்தால் கமிட்டி தேவைதான் என ரித்விகா கூறியுள்ளார். மேலும் கோலிவுட்டை பொறுத்த வரைக்கும் அந்த பிரச்சனை நிறைய இல்லன்னு தான் நான் நினைக்கிறேன். நான் பத்து வருஷமா சினிமாவில இருக்கிறேன். வேற்று மொழி படங்களை நான் நடிச்சது இல்ல.
இங்க நான் சேஃபா தான் ஃபீல் பண்றேன். எல்லா சூட்டிங் போகும்போது நான் பாதுகாப்பா தான் இருக்கேன். தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் இருக்கிற பிரச்சனை பேச்சு வார்த்தை முடிஞ்சதுக்கு அப்புறம் சரி செஞ்சுருவாங்க. ஜூனியஸ்க்கு கொஞ்சம் பாதுகாப்பான விஷயத்தை சூட்டிங் ஸ்பாட்ல அமைச்சு கொடுத்தா இந்த மாதிரி பிரச்சனை இருக்காதுன்னு தோணுது. கேரவன் பிரச்சனை இருக்க போய் தான் நிறைய சிக்கல்கள் இருக்கு. ஜூனியஸ்க்கு இன்னும் கொஞ்சம் பாதுகாப்பான விஷயத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செஞ்சு கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன்.
நாங்க சேஃபா தான் இருக்கோம். வேற எந்த ஃபீல்டிலும் அசிஸ்டன்டையும் அம்மாவையோ கூட கூட்டிட்டு போக முடியாது. ஆனால் சினிமால கூட ஒரு ஆள் கூட்டிட்டு போலாம். அதுக்கான எல்லா தேவையும் அவங்களை பண்ணி தராங்க. ஒரு சில இடத்தில் தவறு நடக்குது. அது நடக்காம இருக்கிறதுக்கு என்ன செய்யணும் கண்டிப்பா யூனியன் அந்த முடிவை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். அட்ஜஸ்ட்மென்ட் எனக்கு நடக்கல. ஆனா நிறைய இடங்களில் அதை நான் கேட்கிறேன். இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம் தான் என கூறியுள்ளார்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…