சமீபத்தில் நடிகர்கள் அரவிந்தசாமி விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ் படம் வெளியானது. இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இந்த படம் மௌன படம் என்பதால் பல காட்சிகளை நடிப்பிலேயே மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த பேசும் படத்தை மையமாக வைத்துதான் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.
பேசும் படத்தில் அனைவரும் பேசக்கூடியவர்கள் தான். ஆனால் பேசுவதற்கான எந்த வாய்ப்பும் இருக்காது. ஆனால் இந்த படத்தில் செய்கையால் கை கால்களை ஆட்டி காட்சிகளை புரிய வைத்திருக்கிறார்கள். ஏன் அப்படி செய்தார்கள் என தெரியவில்லை. இந்த படத்தை பொருத்த வரை காலுக்கு ஏற்றபடி செருப்பு வாங்கவில்லை. செருப்பை வாங்கிவிட்டு அதற்கு ஏற்றபடி காலை வெட்டி செருப்பில் சொருகி இருக்கிறார்கள்.
படத்தில் வரும் கதாபாத்திரம் ஒன்றும் மனதில் நிற்கவே இல்லை. குறிப்பாக பிக்பாக்கெட் கதாபாத்திரம் எதற்கு வருகிறது என்றே தெரியவில்லை. படத்தில் வரும் கதாபாத்திரம் யாருமே பேசவில்லை. அதேபோல இந்த படத்தைப் பற்றி பேசுவதற்கும் எனக்கு எதுவும் இல்லை என்று சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…