சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சாந்தனு நான் பாக்யராஜின் வாரிசாக மட்டுமே ரசிகர்களால் பார்க்கப்படுவதால் தனது படங்கள் தோல்வி அடைவதாக வருத்தப்பட்டு பேசியிருந்தார். இதுபற்றி சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், உங்களைப் போன்ற சினிமா வாரிசுகளின் படங்கள் தோற்க முக்கியமான காரணம் தவறான கதை மற்றும் இயக்குனர் தேர்வு தான். அதை உணர்ந்து சரி செய்து வெற்றி பெற வேண்டும். அதை விட்டுவிட்டு பழியை தூக்கி தந்தைகள் மீது போடுவது கையாலாகாத செயலின் வெளிப்பாடு.
நீங்கள் எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாகி விட்டீர்கள். அதை பயன்படுத்தி முன்னுக்கு வராதது யாருடைய தவறு? இத்தனை வருடங்களில் உங்களைப் போன்ற வாரிசுகள் வளர்த்துக் கொண்ட தனித்திறமைகள் என்ன? அது மக்களிடம் எந்த அளவுக்கு சென்று சேர்ந்தது? உடம்பை பிட்டாக வைத்திருக்க வேண்டியது ஹீரோக்களின் கடமை. அது தனித்திறமை அல்ல.
சுப்ரமணியபுரம் காதல் களவாணி பாய்ஸ் டாணாகாரன் மகாராஜா போன்ற பல படங்களை தவறவிட்டது நீங்கள் தானே? இதில் ஷங்கர் தவிர்த்து அனைவருமே புது இயக்குனர்கள். அவர்களை நீங்கள் நம்பவில்லை. அவர்களை நம்பிய விமல் விக்ரம் பிரபு விஜய் சேதுபதி ஆகியோர் நீங்க தவறவிட்ட படங்களில் நடித்து வெற்றி பெற்றனர். ஆகவே தோல்விக்கான பழியை தூக்கி விதி மேல் போடாமல் மதியை பயன்படுத்தி ஒரு ஹிட்டாவது தரும் வேலையை சரியான முறையில் செயல்படுத்துங்கள் என்று சாந்தனுவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…