closeup of a young caucasian man holding the hand of an old caucasian woman with affection, in black and white
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் 64 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த ஜூலை 8-ஆம் தேதி மூதாட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண் “நான் உன்னுடன் கல்லூரியில் படித்தேன். இப்போது லண்டனில் இருக்கிறேன்” என கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார்.
சில நாட்கள் கழித்து அந்த பெண் மூதாட்டியை தொடர்பு கொண்டு கணவர் இறந்து விட்டதால் லண்டனில் தனியாக வாழ்கிறேன். இப்போது உனக்காக பரிசு பொருட்களை அனுப்பி வைத்துள்ளேன் எனக் கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து ஒரு மர்ம நபர் மூதாட்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் வந்துள்ளது.
அதில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருப்பதால் வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும் என கூறி பல்வேறு தவணைகளாக மூதாட்டியிடம் இருந்து 46.91 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். ஆனால் பார்சலும் வரவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதுகுறித்து மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…