திமுக உட்கட்சி அமைப்புகளில் அதிரடி மாற்றம்… செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. இதோ முழு விவரம்…..!

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய இரத்தம் பாய்ச்சவும் பல்வேறு முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கிளைக்கழகச் செயலாளர் முதல் மாவட்டக் கழகச் செயலாளர் வரையிலான பொறுப்புகளுக்கு வயது வரம்பு மற்றும் பதவிக் காலம் குறித்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும். மேலும், சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகளில் வட்டக்கழகங்களை மேலும் வலிமைப்படுத்த கிளைக்கழகங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன.

அமைப்புகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை மற்றும் நிர்வாகிகளின் வயது வரம்பில் விரிவான மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வட்டக்கழகங்கள் சராசரியாக 10,000 வாக்காளர்களையும், பிற மாநகராட்சிகளில் 5,000 வாக்காளர்களையும் கொண்டிருக்கும். பகுதிக்கழகங்களைப் பொறுத்தவரை சென்னையில் 40,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகராட்சிகளில் 30,000 வாக்காளர்களுக்கும் ஒரு பகுதி உருவாக்கப்படும். நகரக் கழகங்கள் 40,000 வாக்காளர்களையும், ஒன்றியக் கழகங்கள் 30,000 வாக்காளர்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும். வயது வரம்பைப் பொறுத்தவரை மாநகர, நகர, பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு 50 வயதும்; பேரூர், பகுதி, நகர, ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்கு 60 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டக் கழக அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என மறுசீரமைக்கப்பட்டு, மொத்தமாக 110 கழக மாவட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன. எஞ்சியிருக்கும் ஒற்றைத் தொகுதி பொருத்தமான மாவட்டத்துடன் சேர்க்கப்படும். மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், “மாநகரச் செயலாளர்” என்ற பொறுப்பு இனி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. திமுக தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்த பிறகு, 15 நாட்களுக்குள் ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட்டு, தலைமைக் கழகப் பிரதிநிதி முன்னிலையில் ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

6 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago