தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாக, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அடுத்தடுத்து பலர் ராஜினாமா செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்துள்ள நிகழ்வு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து இவரது ஆதரவாளர்களும் தங்கள் பதவிகளைத் துறந்து வருவதால், தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ பி. அய்யப்பனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு முன்பாகவே ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ வைத்திலிங்கம் மற்றும் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர். இதேபோல், அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தனது கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
கட்சித் தாவல் காரணமாக ஏற்பட்ட ஐந்து காலி பணியிடங்கள் தவிர, இரண்டு இடங்கள் எம்.எல்.ஏ-க்களின் மறைவால் காலியாகியுள்ளன. வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி மற்றும் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ பொன்னுசாமி ஆகியோர் கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிகள் ஏற்கனவே காலியாக உள்ளன. இவ்வாறு மொத்தம் ஏழு தொகுதிகள் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
பொதுவாக ஒரு தொகுதி காலியானால் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இருப்பினும், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ளதாலும், பொதுத்தேர்தல் நெருங்குவதாலும் இந்த ஏழு தொகுதிகளுக்கும் தனியாக இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த “ராஜினாமா சீசன்” வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…