தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கட்சி எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல அதிமுக இரண்டு பிளவாக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்ட ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இப்படி ஒருபுறம் இருக்க மறுபுறம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.
அந்தவகையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், கவின் ஆவணக் கொலை வழக்கு ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் திமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை ‘அங்கிள்’ என விஜய் அழைத்ததில் எந்த தவறும் இல்லை என்ற அவர், TVK தரப்பில் கூட்டணிக்கு அழைத்தால் பரிசீலிப்போம் என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…
35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…