கடந்த வாரம் சனிக்கிழமை தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்காதது, விஜய் கட்சியின் அலட்சியப் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த எதிர்பாராத விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய்க்கு ஒரு தரப்பு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு எதிராகவும் மாறி உள்ளது.
குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தன்னுடைய கூட்டணியை அதிமுக மற்றும் பாஜகவுடன் அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இதற்கு தூண்டில் போடும் விதமாக இப்போது டெல்லி தலைமை விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதை கருத்தைதான் நீதிமன்றமும் நேற்று கூறியிருந்தது.. தற்போது அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விஜய் மீது தவறு உள்ளது, அவரை கைது செய்ய வேண்டும் என்று சொன்னால் காவல்துறை அந்த கடமையை செய்யும் என்று திமுகவின் TKS இளங்கோவன் கூறியது அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய விஜய், முந்தைய அரசின் நிதி நிர்வாகம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…