கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் திகழ்பவர். தானது ஐந்து வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் கமல்ஹாசன். கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் கமல்ஹாசன். இவரது அபாரமான நடிப்பிற்காக பல தேசிய விருதுகள், தமிழக மாநில விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், கலைமாமணி, செவாலியர் போன்ற பல விருதுகளை வைத்திருக்கிறார்.
கமலஹாசன் தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் வங்காளம் போன்ற பல மொழிகளில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்திருக்கிறார் மற்றும் தமிழ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து இருக்கிறார் கமல்ஹாசன்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 7 சீசன்களையும் இவரே தொகுத்து வழங்கி வந்த நிலையில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகி விட்டார். இதனால் யார் தொகுத்து வழங்க போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்த முறை கமலஹாசன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் அமெரிக்க சென்றதால் தான் அவரால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை என்றம் மக்கள் நீதி மையம் மாநில துணைத்தலைவர் கோவை தங்கவேல் தெரிவித்துள்ளார் .
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…