தமிழகத்தின் முதல் பெண் அமைச்சரும் முன்னாள் முதலமைச்சரருன எம்ஜிஆரின் மனைவி ஜானகிராமச்சந்திரன் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா மலரை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் . எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் அதை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜானகிராமச்சந்திரன் அவர்களோடு பயணித்த நடிகை ராஜேஸ்வரி, நடிகை வெண்ணீராடை நிர்மலா, குட்டி பத்மினி உள்ளிட்ட பலரும் பலருக்கு எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஜானகி ராமச்சந்திரன் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் எம்ஜிஆர் திரை வாழ்க்கயை தியாகம் செய்து கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகிராமச்சந்திரன். ராமாபுரம் தோட்டத்திற்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரிப்பார் . கட்சி நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர்தான் ஜானகிராமச்சந்திரன். மூன்று முறை நான் அவரை நேரில் பார்த்துள்ளேன்.
ராகவேந்திரா படத்தின் போதும் அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்தபோது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படபிடிப்பு தளத்தில் இருந்தபோது என்னை சந்தித்தார். அவர் கையால் காபி போட்டு கொடுத்து உபசரித்தார். படங்களில் நான் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஜானகிராமச்சந்திரன் இடம் எம்ஜிஆர் சொன்னதாக அவர் என்னிடம் கூறினார்.
அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான். நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்து பலரிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் வெவ்வேறு கருத்துக்களை சொன்னார்கள். அரசியல் தெரிந்து தான் சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று நான் யோசித்தேன். அந்த அடிப்படையில் ஜானகிராமச்சந்திரன் தொண்டர்களுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று அதிமுகவின் பிரம்மாஸ்திரமான இரட்டை இலை உட்பட அனைத்து கட்சி பொறுப்பு உடைமைகள் அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். அவருடைய நல்ல குணம் குணம் பக்குவத்தை உணர்த்தியது. இன்று அவருடைய நூற்றாண்டு விழா எடுத்துள்ள கட்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றி என்று பாராட்டி உள்ளார்.
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…