ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான பரந்தாமன், தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்த இவருக்கு, கட்சியின் மேலிடம் ராமேஸ்வரம் 10-வது வார்டு செயலாளர் பொறுப்பை வழங்கியது. ஆனால், அந்தப் பதவி குறுகிய காலத்திலேயே அவரிடமிருந்து பறிக்கப்பட்டு வேறொருவருக்கு வழங்கப்பட்ட நிலையில், மனமுடைந்த பரந்தாமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சிக்காகவும் தேர்தல் பணிகளுக்காகவும் தனது சொந்தப் பணத்தைப் பல லட்ச ரூபாய் வரை செலவு செய்த நிலையிலும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேட்ட தொகையை வழங்காததாலேயே தனது பொறுப்பு பறிக்கப்பட்டதாகக் கருதிய பரந்தாமன், இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலாவிடம் நியாயம் கேட்டுள்ளார். அப்போது, சக கட்சியினர் முன்னிலையில் பரந்தாமனை அவர் ஒருமையில் பேசி மிகக் கடுமையாக அவமதித்ததால், அதீத மன உளைச்சலுக்கு ஆளாகியே தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அவரது மனைவி தேவகி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது கணவரின் மரணத்திற்கு மாவட்டச் செயலாளரே முழுக்காரணம் எனக் கூறி காவல் நிலையத்தில் தேவகி புகாரளித்துள்ளார். இதற்கிடையே, பிரேதப் பரிசோதனைக்காகப் பரந்தாமனின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, மலர்விழி ஜெயபாலா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தற்கொலைக்கான உண்மையான பின்னணி குறித்துக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…
6 அடி 8 அங்குல உயரமும், பெரிய உடல் அமைப்பும் கொண்ட ஒரு நபர், ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையைப்…
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…
குவஹாத்தி நரேங்கிப் பகுதியிலுள்ள சாந்தி நகரில், கடுமையான மதுபோதையில் இருந்த கோலக் ரபா மற்றும் பிரஞ்சித் கலிதா ஆகிய இரண்டு…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோயிலின் 9 கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணி கடந்த நவம்பர்…