பெங்களூர் யஷ்வந்தபுராவில் உள்ள முத்யாலம்மா நகரில் நரசிம்மராஜூ (32) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்தார். இருவரும் அண்டை வீட்டார் என்ற முறையில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியது. வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில், நரசிம்மராஜூ அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனிமையில் உல்லாசம் அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர், கடந்த நவம்பர் 22ஆம் தேதி நரசிம்மராஜூவின் வீட்டைக் கண்காணித்துள்ளனர். இருவரும் வீட்டுக்குள் இருக்கும்போது, உறவினர்கள் கதவைத் தட்டி உள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு நரசிம்மராஜூ கதவைத் திறந்தபோது, இருவரும் கையும் களவுமாகச் சிக்கினர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், நரசிம்மராஜூவை தனியாக அழைத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நரசிம்மராஜூ, அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து யஷ்வந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, நரசிம்மராஜூவைத் தாக்கிய உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…