விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதில் ஆறு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீடு இந்த சீசனில் இரண்டாக பிரிந்துள்ளது. அதில் 6 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளார்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை விட வெளியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிகமான கண்டிஷன் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தொடர்பாக தகவல் வெளியானது. ஆனால் அந்த லிஸ்டில் இருந்த பாதி பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை. அதில் ஒருவர் ரேகா நாயர். இதுபற்றி பேசிய ரேகா நாயர் முதல் சீசனின் ஒரிஜினாலிட்டி இருந்தது. ஆனால் போகப் போக ஸ்கிரிப்ட் ஆகவே மாறிவிட்டது. என்னை பொறுத்தவரை அங்கு இருப்பதும் ஜெயிலில் இருப்பதும் ஒன்றுதான்.

கமல்ஹாசன் என்ற உச்ச பிரபலத்தை வியாபாரத்தின் உச்சியாக வைத்து அவரையும் வியாபாரம் பேசுகிறது. இதனை கமல் சார் புரிந்து கொள்ளவில்ல. அது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் இதை செய்ய மாட்டேன் என கூறி இருக்க வேண்டும் என ரேகா நாயர் பேசியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்நேரம் பிக் பாஸ் வீட்டிற்குள் ரேகா நாயர் வந்திருந்தார் அனல் பறந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

