அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தற்போதைய முக்கியத் தேவை என்றும், தான் மீண்டும் கட்சியில் இணைவது என்பது இறைவனின் கையில் உள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் பல்வேறு சக்திகள் மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது குறித்து டி.டி.வி.தினகரன் உங்களிடம் பேசினாரா? என்ற கேள்விக்கு, இதுவரை அவர் உள்ளிட்ட யாரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று ஓ.பி.எஸ். விளக்கமளித்தார். மேலும், நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, அது தொடர்பான கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…