“அதிகாலை 7 மணிக்கு விஜய்க்கு வந்த ‘ஷாக்’ போன் கால்”…. அடுத்த செகண்டே மாறிய டெல்லி ப்ரோக்ராம்…. பின்னணியில் இருக்கும் அந்த ‘முக்கிய’ புள்ளி..!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்த விவாதங்களால் சூடுபிடித்துள்ளது. தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, ராகுல் காந்திக்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார். அப்போது, “பெரும்பான்மையை நிரூபித்த பிறகு டெல்லி வந்து உங்களை நேரில் சந்திக்கிறேன்” என்று விஜய் கூற, “அவசரமில்லை, டெல்லி வரும்போது அவசியம் சந்திப்போம்” என ராகுலும் இணக்கம் தெரிவித்திருந்தார். அதன்படி, சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க விஜய்க்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைத்ததைத் தொடர்ந்து, மே 28-ஆம் தேதி காலை ராகுல் காந்தியைச் சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளும் டெல்லியில் தயார் நிலையில் இருந்தன.

ஆனால், சந்திப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதாவது மே 28 அதிகாலை 7 மணிக்கு விஜய்க்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. காங்கிரஸ் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யைத் தொடர்புகொண்டு, ராகுல் மற்றும் சோனியா காந்தியுடனான சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். கர்நாடகாவில் நிலவும் முதல்வர் மாற்ற விவகாரம் காரணமாக ராகுல் காந்தி மிக பிஸியாக ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டது. இந்த திடீர் மாற்றத்தால் விஜய் அதிர்ச்சியடைந்தாலும், கர்நாடக அரசியல் சூழல் காரணமாக இருக்கலாம் என நம்பினார். எனினும், விஜய்யைச் சுற்றியுள்ள உயர் அதிகாரிகள் தரப்போ, இதில் ஏதோ உள் அரசியல் விவகாரம் இருக்கிறது, காங்கிரஸ் உண்மையை மறைக்கிறது என்று சந்தேகத்தைக் கிளப்பினர்.

உண்மையில், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அசல் பின்னணி பிரதமர் அலுவலகத்தில் (PMO) நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தில் தான் தொடங்கியிருக்கிறது. டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த விஜய், தமிழக நலன்களை முன்வைத்து 4 முக்கிய கோரிக்கைகளை அவரிடம் மனுவாக அளித்துள்ளார். அதில் மிக முக்கியமான ஒன்று, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் ‘மேகதாது அணை’ கட்டும் விவகாரம் ஆகும். விஜய் கொடுத்த கோரிக்கைகளை மேலோட்டமாகப் படித்துப் பார்த்த பிரதமர் மோடி, அருகில் இருந்த தனது அரசின் உயரதிகாரி ஒருவரிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசித்துள்ளார்.

அப்போது அந்த அதிகாரி, “இந்த விவகாரத்தை நம்மிடம் சொல்வதை விட அவர் காங்கிரஸ் தலைமையிடம் சொல்லலாம். ஏனெனில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது; அதேநேரம் தமிழகத்தில் விஜய்யின் அரசில் காங்கிரஸும் கூட்டணியில் இருக்கிறது. அந்த வகையில் இருவரும் பார்ட்னர்கள் என்பதால், காங்கிரஸ் தலைமையிடம் பேசினால் பிரச்சனை எளிதாக முடிந்துவிடுமே” என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி விஜய்யிடம், “நாளை நீங்கள் ராகுல் காந்தியைச் சந்திக்கிறீர்கள் அல்லவா, அவரிடமே இந்த மேகதாது விவகாரத்தைச் சொல்லுங்கள், எல்லாம் சரியாகும்” என்று புன்னகையுடன் அட்வைஸ் செய்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த உரையாடல், அன்றைய இரவே ராகுல் காந்தியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. விஜய் தன்னைச் சந்தித்தால் நிச்சயம் மேகதாது அணை கோரிக்கையைத் தன்னிடம் வைப்பார் என்பதை ராகுல் உணர்ந்துகொண்டார். ஒருவேளை விஜய் கோரிக்கை வைத்தால், தமிழகத்தில் கூட்டணி வைத்துள்ளதால் அதை ராகுலால் நேரடியாக மறுக்க முடியாது; அதேநேரம், விஜய்க்காக கர்நாடகாவில் உள்ள தங்களது சொந்த காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் முடியாது. இதனால் ஏற்படும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கவும், அரசியல் நெருக்கடியிலிருந்து தப்பிக்கவும் ஒரே வழி விஜய்யைச் சந்திக்காமல் இருப்பதுதான் என ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இந்த இக்கட்டான சூழல் காரணமாகவே, கர்நாடக முதல்வர் மாற்றத்தைக் காரணமாகக் காட்டி விஜய்க்கு அளிக்கப்பட்ட அப்பாயிண்ட்மென்ட் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற உண்மைத் தகவல் தற்போது காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் மூலம் கசிந்துள்ளது.

Nanthini

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

2 minutes ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

21 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

32 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

39 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

56 minutes ago