தமிழகத்தில் லஞ்சமில்லாத வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக, அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் தலைதூக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிர்வாகிகளின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேசியத் தலைவர் ஹென்றி, தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பத்திரப்பதிவுத் துறையில் கோப்புகள் எவ்வித நியாயமான காரணமும் இன்றி முடக்கி வைக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களும் தொழில்முனைவோரும் தாமாகவே முன்வந்து லஞ்சம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக்காலத்தை விட தற்போது “காட்டேரி போன்று” தீவிரமாக லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும், இதையே தற்போதைய அரசின் “ஸ்மார்ட் கரப்ஷன்” முறை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அரசு அலுவலகங்களில் தொடரும் லஞ்ச ஊழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், கிராமப்புற மனைப்பிரிவு மேம்பாடுகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் முறைகேடுகள் உடனடியாகக் களையப்படாவிட்டால், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…
பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான…