Categories: சினிமா

கில்லி முதல் பருத்திவீரன் வரை… 2024-இல் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரிய படங்கள்..!

Spread the love

இந்த வருடம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. அனைவரும் 2025 ஆம் வருடம் வரவேற்க தரையாக இருக்கிறோம் இந்த நேரத்தில் 2024-ம் வருடத்தின் சிறந்த படங்கள், பாடல்கள் என அனைத்தையுமே நினைவுகூர்ந்து பார்ப்பது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் வருடம் ரீ ரிலீஸ் ஆன படங்கள் குறித்து பார்க்கலாம்.

#image_title

விஜய், த்ரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் கில்லி. இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது. இந்த படம் வெளியாகி 20 வருடத்திற்கு மேல் ஆன நிலையில் விஜயின் இளம் ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்த்து ரசிகர் ரசித்தார்கள். புது படத்திற்கு செய்வது போல டிக்கெட் முன்பதிவு செய்து படத்தை ரசிகர்கள் பார்த்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி வசூல் செய்தது.

#image_title

நடிகர் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித்தை வேறு ஒரு கோணத்தில் காட்டி இருப்பார்கள். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஆனது அஜித் பிறந்தநாளை ஒட்டி பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு கடந்த மே மாதம் அன்று மறுபடியும் ரீரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியாகி 10 கோடி வசூலை அள்ளியது.

தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நந்திதாதாஸ், தேவயானி, விவேக் ,மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் அழகி. இந்த படம் பள்ளி பருவ காதலையும், காதலின் பிரிவையும் சொல்லிய படம். இந்த படம் 22 வருடங்களுக்கு முன் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி நல்ல வசூலை அள்ளிய நிலையில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

சந்தானபாரதி இயக்கத்தில் கமலஹாசன், ஜனகராஜ், ரேகா உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் குணா. இந்த படம் 1991 ஆம் வருடம் வெளியானது. இந்த படம் வெளியாகி 33 வருடங்கள் ஆகியும் இந்த படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை இந்த காலத்தில் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள் . இந்த படமானது கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது.

அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் பருத்திவீரன். இந்த படம் 2007 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 17 வருடங்கள் கழித்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

Soundarya

Recent Posts

பகீர் கிளப்பும் மரணம்… 7- ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன ஆச்சு?… ஏகலவ்யா மாதிரிப் பள்ளியில் தொடரும் சோகம்… கதறித் துடிக்கும் பெற்றோர்… பின்னணி என்ன?…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…

47 seconds ago

“கட்சி இணைப்புக்கு நோ… கூட்டணிக்கு ஓகே…” மீண்டும் எழும் ‘பவர் சென்டர்’ பிரச்சனை…. டிடிவி தினகரனின் கோரிக்கையை ஏற்க இபிஎஸ் யோசனை…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

1 minute ago

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

10 minutes ago

“ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்…” ரூ.1,200 கோடி மக்கள் பணம் வீண்… புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு…!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…

15 minutes ago

“இந்தியாவுக்கு 100 சதவீத வரி…” அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேறிய மசோதா… டிரம்ப் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு….!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…

30 minutes ago