சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் தொகுபாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தயாரிப்பாளர் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் ஓனரான தயாரிப்பாளர் ரவீந்தர் நட்புன்னா என்னன்னு தெரியுமா?, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஒரு சில திரைப்படங்களை தயாரித்தவர். இதை தவிர பல திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளார்.

தற்பொழுது இவர் ‘காதல் கண்டிஷன் சப்ளை’ என்ற திரைப்படத்தை விநியோகம் செய்ய உள்ளார். சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.

இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை சென்ற வருடம் திடீரென இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். இதைத்தொடர்ந்து பல விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்த இவர்கள் தற்பொழுது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படங்களாக இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். தற்பொழுது மஹாலக்ஷ்மி தனது கணவருடன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

தற்பொழுது இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்பொழுது அதிகம் ஷேர் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

