இந்தோரின் புகழ்பெற்ற 5 நட்சத்திர ஹோட்டலான ‘சாயாஜி’ உணவக சமையலறையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் எலிகள் மற்றும் கரப்பான்பூச்சிகள் சுற்றித் திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனித நுகர்வுக்கு உகந்ததாக இல்லாத, சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அங்கு பயன்பாட்டில் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
சோதனையின் போது, சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் இரண்டும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரே இடத்தில் ஒன்றாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு முற்றிலும் எதிரான செயலாகும். அத்துடன், காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் முறையான லேபிள் இல்லாத உணவுகளும் சோதனையில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களின் சுகாதாரத்தைப் பெரிதும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட சாயாஜி ஹோட்டலுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், சமையலறையிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…