இளைய தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விஜயுடன் எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டுள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பாடல் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, ஷியாம், யோகி பாபு என ஏகப்பட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தை பெரும் பொருட் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்சமயம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டமாக தற்பொழுது ராஷ்மிகா மந்தனா விஜயுடன் சேர்ந்து செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…