பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. திரையுலகமே வியந்து பார்த்த இந்தத் திருமணத்திற்குப் பிறகு, ராஷ்மிகா தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். இருப்பினும், திருமணமான சில நாட்களிலேயே தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது குறித்து அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் மிகவும் காட்டமான எச்சரிக்கை பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ள ராஷ்மிகா, கடந்த 8 ஆண்டுகளாகவே இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களைத் தான் எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “இதுவரை இந்த அவதூறுகள் என்னை மட்டுமே பாதிக்கும் என்பதால் பொறுமை காத்தேன்; ஆனால் இப்போது நிலைமை எல்லை மீறிவிட்டது, இனியும் என்னால் மௌனமாக இருக்க முடியாது” என்று அவர் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். ஒருவரின் தனியுரிமை மீதான இத்தகைய அத்துமீறல்களைத் தொடர்ந்து அனுமதிக்கப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…