பாம்பன் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களின் வலையில், ஓர் அரிய வகைச் சூரிய மீன் சிக்கியது. சுமார் 15 கிலோ எடையும், 3 அடி நீளமும் உயரமும் கொண்ட இந்த மீனின் வால் துடுப்புப் பகுதி உருமாறிய நிலையில் காணப்பட்டது. இந்த விநோத தோற்றத்தைக் காண பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் கூடினர்.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இது சூரிய மீன் எனப்படும் இனத்தைச் சேர்ந்தது என்றும், இது அதிகபட்சமாக 3 மீட்டர் நீளம் வரையிலும், 1,000 கிலோ எடை வரையிலும் வளரக்கூடியது என்றும் கூறினர். அமைதியான இந்த மீன், சிப்பி, நண்டு, இறால் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது.
பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உட்பட பல்வேறு கடல்களில் காணப்படும் இந்த இனம், மன்னார் வளைகுடா பகுதியில் மிகவும் அரிதாகவே தென்படுகிறது. மேலும், இந்த வகை மீனை மக்கள் பொதுவாக உணவுக்காக விரும்புவதில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…