கூலிப் போட்டால்தான் அவரால் மேடையேற முடியும்… அதுமட்டுமல்ல இன்னொரு விஷயம் இருக்கு… விஜய் குறித்து ரஞ்சனா நாச்சியார் பகீர் புகார்..!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தலைவர் விஜய் குறித்துப் பகிரங்கமான சில புகார்களைத் தெரிவித்துள்ளார். விஜய் பொதுக்கூட்ட மேடைகளுக்குச் செல்லும் முன்பும், கட்சிப் பணிகளின் போதும் ‘கூல் லிப்’ (Cool Lip) போன்ற புகையிலை சார்ந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சனா நாச்சியாரின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், “விஜய் இத்தகைய போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளார்; அவை இல்லாமல் அவரால மேடைக்கே செல்ல முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, மது அருந்தாமல் அவரால் விமானத்தில் கூடப் பயணம் செய்ய முடியாது” என்று மிகக் கடுமையான தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஒரு தலைவராக இருப்பவர் இத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ள நிலையில், அவர் மக்களுக்குப் போதை ஒழிப்பு பற்றிப் பேசுவது முற்றிலும் போலித்தனமானது என்றும் அவர் சாடியுள்ளார்.

ரஞ்சனா நாச்சியாரின் இந்தப் புகார்களுக்கு விஜய் தரப்பிலிருந்தோ அல்லது தவெக கட்சியிலிருந்தோ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், திட்டமிட்டு விஜய்யின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

4 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

8 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

11 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

24 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

30 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

35 minutes ago