வதோதராவின் கலாலி பகுதியில் உள்ள கிஸ்கோலி சர்க்கிள் அருகே ‘ராணி’ என்ற குதிரை சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால்வாயின் கான்கிரீட் மூடி அதன் எடையைத் தாங்க முடியாமல் திடீரென உடைந்து உள்வாங்கியது. இதனால் குதிரை பல அடி ஆழமுள்ள குறுகிய வடிகால்வாய்க்குள் தலைகீழாக விழுந்து சிக்கிக் கொண்டது. நல்ல வேளையாக, குதிரையின் மீது பயணித்த அதன் உரிமையாளர் வடிகால்வாய் சரிவதற்குள் சாலையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகார்புரா தீயணைப்பு நிலைய வீரர்கள், முதலில் குதிரையை கயிறுகள் மூலம் மேனுவலாக வெளியே இழுக்க முயன்றனர். ஆனால், வடிகால்வாயின் வாய் பகுதி மிகவும் குறுகலாக இருந்ததாலும், குதிரை பயந்துபோய் இருந்ததாலும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் ‘ராக் டிரில்லர்’ வரவழைத்து, வடிகால்வாயின் கான்கிரீட் சுவர்களை கவனமாக உடைத்து வழியைப் பெரிதாக்கினர். பின்னர் குதிரையின் உரிமையாளரை உள்ளே அனுப்பி அந்த விலங்கை அமைதிப்படுத்திய பின், நவீன மீட்புக் கருவிகளின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குதிரை பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் வதோதரா மாநகராட்சியின் பராமரிப்புப் பணிகள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்கள் மற்றும் விலங்குகள் நடமாடும் முக்கிய சாலைகளில் உள்ள வடிகால்வாய் மூடிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு இவ்வளவு மோசமாக இருப்பதா என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த மீட்புப் பணியின் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசாரும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அதிர்ஷ்டவசமாக குதிரை லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தது அனைவரையும் நிம்மதியடையச் செய்துள்ளது.
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…