உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் சேர்ந்த 18 வயது இளைஞரான பவன், மூன்று குழந்தைகளின் தாயும் 38 வயதுமான சுமன் என்பவரைக் காதலித்துள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ளதை மறைத்துவிட்டு பவனுடன் வீட்டைவிட்டு ஓடிய சுமன், ஹரியானாவில் அவருடன் மூன்று மாதங்கள் வாழ்ந்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, பவன் எல்லாவற்றையும் உதறிவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். ஆனால், சுமன் தன் காதலில் தீவிரமாக இருந்ததால் பவனைத் தேடி லக்கிம்பூருக்கு வந்து கடந்த மூன்று மாதங்களாக அங்கேயே வசித்து வருகிறார்.
https://twitter.com/askrajeshsahu/status/2082308269088145804/photo/1
இதற்கிடையில், சுமனின் கணவர் தனது மூன்று குழந்தைகளுடன் அங்கு வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்; ஆனால் சுமன் அவருடன் செல்ல மறுத்துவிட்டதால், ஊர்ப் பஞ்சாயத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் கணவர் குழந்தைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டார். சுமன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், திருமணமாகி குழந்தைகள் உள்ள உண்மையை மறைத்துவிட்டதால் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் பவன் விரும்புகிறார். மறுபுறம், பவனின் தந்தை ராஜேந்திரா, “இது போன்ற சம்பவங்கள் சரியல்ல, ஆனாலும் அவள் இங்கு வந்துவிட்டதால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அவள் இங்கேயே இருக்க விரும்பினால் இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…