நடிகர் ரம்யா கிருஷ்ணன் விலை உயர்ந்த புடவை ஒன்றை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அப்புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 14 வயதில் ‘பலே மித்ருலு’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதுவரையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒரு நடிகை. இவர் தமிழில் இவர் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படம் தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது.
2003இல் கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரித்விக் என்ற ஒரு மகன் உள்ளார். விஜய் டிவியின் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் மற்றொரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்காக வேண்டி நடிகை ரம்யா கிருஷ்ணன் விலை உயர்ந்த ஒரு புடவை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புடவையின் விலை ரூபாய் 1. 25 லட்சம் என்று கூறப்படுகிறது. ரூபி ரெட் எம்ராய்டரி சார்ஜர் புடவையாம். இப்புடவையின் ஸ்பெஷல் என்னவென்றால் தூய பட்டு வெல்வெட் கொண்டும் தூய பருத்திப் பட்டில் எம்ராய்டரி டிசைன் கொண்டும் செய்யப்பட்டுள்ளதாம்.விலை உயர்ந்த புடவையை அணிந்து போட்டோஷூட் நடத்திய இவர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…….
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…