பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த மோதல் போக்கு, சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் இரு தரப்பும் தனித்தனியாக களம் கண்ட நிலையில், அன்புமணி தரப்பு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேநேரம், ராமதாஸ் அணியினரின் செயல்பாடுகளால் பல தொகுதிகளில் பாமகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாக விமர்சனங்கள் எழுந்தன. தற்போது தந்தையும் மகனும் மீண்டும் இணைந்துவிட்ட சூழலில், அன்புமணியைப் பார்த்து ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வு குடும்பத்தினரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த இணைப்பு அன்புமணி தரப்பிற்கு புதிய தெம்பைத் தந்துள்ளது.
இருப்பினும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் இந்த திடீர் சமரசம், ராமதாஸின் தீவிர ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களை அன்புமணி இனிவரும் காலங்களில் கட்சியில் தகுந்தபடி அங்கீகரிப்பாரா என்ற ஐயம் அவர்களுக்குள் எழுந்துள்ளது. இதன் காரணமாக, ராமதாஸின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட பல சீனியர் தலைவர்கள் தற்போது பாமகவில் இருந்து விலகி, மாற்று கட்சிகளில் இணைவதற்கு தீவிரமாக தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்த அதிருப்தியை பகிரங்கப்படுத்தும் வகையில் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், “ஒரு ஆண்டுக்கு முன்பே ராமதாஸும் அன்புமணியும் இணைந்திருந்தால், பாமகவில் பல நிர்வாகிகள் கடனாளியாக மாறி இருக்க மாட்டார்கள்; பல கோடி ரூபாய் செலவு செய்தவர்களை ராமதாஸ் நட்டாற்றில் விட்டுவிட்டார்” என்று சாடியுள்ளார். மேலும், தங்களின் அடுத்தகட்ட முடிவு குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரைப் போன்றே பாமகவின் முன்னாள் கெளரவத் தலைவரான ஜிகே மணியும் இதே போன்ற அதிருப்தியான கருத்தையே கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வுகளின் பின்னணியில், முன்னாள் எம்எல்ஏ அருள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், மூத்த தலைவர் ஜிகே மணி திமுகவில் இணைவதற்காான தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. ராமதாஸின் ஆதரவாளர்கள் பலரும் மாற்று கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது பாமக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் நேரில் அழைத்து பேசி சமாதானப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…